வெற்றிமாறன் இயக்கத்தில் அஜித் நடிப்பது உறுதி.. பிரபல பத்திரிகையாளர் அதிரடி

65

 

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஏகே 63 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின் அஜித் நடிக்கப்போகும் ஏகே 64 குறித்து சமீபத்தில் தகவல் ஒன்று வெளிவந்தது. அதன்படி, ஐந்துவது முறையாக சிறுத்தை சிவாவுடன் அஜித் கைகோர்க்க போகிறார் என கூறப்படுகிறது.

வெற்றிமாறன் – அஜித்
இந்நிலையில், தொடர்ந்து லைன் அப் வைத்திருக்கும் அஜித், வெற்றிமாறனுடன் இணையப்போவதாக பேசப்பட்டு வருகிறது. திரை வட்டாரத்தில் இதுகுறித்து தொடர்ந்து பேச்சு எழுந்துகொண்டு இருக்கிறது.

ஆம், அஜித் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் உருவாகப்போகிறது. அது கண்டிப்பாக நடக்கும். அப்படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ட் ரெட் குமார் தான் தயாரிக்க போகிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

SHARE