வெலிகம – மிகிந்தலை பகுதியில் நால்வர் கைது!

224

வெலிகம – மிகிந்தலை பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கேரள கஞ்சாவுடன் நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பின் போது 17 கிலோ 850 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவுடன் இருவரை பொலிஸார் கைது செய்த நிலையில்  12 கிலோ கேரள கஞ்சாவுடன் மேலும் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, மிகிந்தலை பெரலுஹின்ன பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 5 கிலோ 850 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மிதிகம, ராகம, அனுராதபுரம் மற்றும் கலேன்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் 28 வயது மற்றும் 54 வயதுடையவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE