தைவான் தலைநகரான தைப்பேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிலநடுக்கம் இன்றையதினம் (03-04-2024) காலை ஏற்பட்டுள்ளதாக தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.மேலும் குறித்த நிலநடுக்கம் தொடர்பில் எக்ஸ் வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.