வெளிமடை தம்பவின்னை என்ற இடத்தில் பாதை அருகில் பற்றைக்குள் இருந்து கைத்துப்பாக்கியொன்றினை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் கைத்துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி இயங்கக்கூடிய நிலையிலிருப்பதாகத் தெரிவித்த வெலிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இது குறித்த தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.