அஜித் நடிப்பில் க்ளாஸ், மாஸ் என பட்டையை கிளப்பிய திரைப்படம் என்னை அறிந்தால். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அருண் விஜய் முதல் முறையாக நடித்திருந்தார்.
இப்படத்தில் வில்லனாக நடித்திருந்த அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் இரண்டாம் இன்னிங்ஸ் துவங்கியது. என்னை அறிந்தால் படத்திற்கு முன், படத்திற்கு பின் என அருண் விஜய்யின் வாழ்க்கையில் மொத்தமாக மாறி இன்று சிறந்த நடிகர் என்ற இடத்தில் இருக்கிறார்.
மேலும் அனுஷ்கா, திரிஷா, விவேக், அனிகா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்ற இப்படம் இன்றுடன் வெளிவந்து 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #9YearsOfYennaiArindhaal என்ற ஹாஷ்டேக்-ஐ பயன்படுத்தி வைரலாக்கி வருகிறார்கள். இந்நிலையில், என்னை அறிந்தால் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, அஜித்தின் என்னை அறிந்தால் உலகளவில் ரூ. 95 கோடி முதல் ரூ. 100 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.