நிரந்தர பணி நியமனம் வழங்குவதாக உறுதியளித்து பலரிடமும் இருந்து இரண்டு இலட்சம் முதல் ஜந்து இலட்சம் வரை இலஞ்சப்பெறப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசாவிற்கு பாதிக்கப்பட்டவர்களால் கையளிக்கப்பட்ட மகஜரினில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிலரிற்கு மட்டும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு விட்டதாகவும் ஏனையவர்களிற்கு நியமனம் வழங்கப்படாத போதும் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை கூட திருப்பி வழங்க சஞ்சீவன் மறுத்துவருதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தம்மிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்தை திருப்பி தராவிடின் தமிழரசுக்கட்சியின் மார்ட்டின் வீதி தலைமை அலுவலகம் முன்பதாக சாகும்வரையான உண்ணாவிரதத்தினில் ஈடுபடப்போவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியின் மகேஸ்வரி நிதியம் மூலம் முன்னெடுக்கப்பட்டு வந்த மணல்கொள்ளையைத் தடுத்து நிறுத்த வடமாகாணசபை போராடிய போது சுமார் ஜந்து மில்லியன் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு மணல் அகழுவதற்கான அனுமதியை சஞ்சீவன் வழங்கியிருந்ததாக வடமாகாண அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டியுமிருந்தார்.
தற்போது அடுத்த பாராளுமன்ற தேர்தல் கனவிலிருக்கும் சுமந்திரனால் அள்ளி வீசப்பட்டுள்ள பணத்தால் அவரது எடுபிடிகளாகி தமிழ் தேசிய ஆதரவாளர்களை மிரட்டுவது மற்றும் கொலை அச்சுறுத்தல்களை இவர் விடுத்துவருவதாக தெரியவருகின்றது.