வெள்ள நீரில் தத்தளித்த உலகின் பரபரப்பான விமான நிலையம்!

146

 

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வெள்ளப்பெருக்கு காரணமாக விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.

100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று பல விமானங்களின் வருகை பாதிக்கப்பட்டது.

விமான ஓடுபாதையில் வெள்ளம் புகுந்ததில், விமானங்கள் மற்றும் கார்கள், நீரில் பாதியளவு மூழ்கின. விமானங்கள் நிறுத்தும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது.

விமான நிலையத்திற்கு வந்து சேரும் சாலைகளும் நீரில் மூழ்கி காணப்பட்டுள்ளன.

SHARE