உலக நாடுகளை ஜிகா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், மிகப்பெரிய கார் நிறுவனமான டாடா நிறுவனம் தனது காரின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.டாடா நிறுவனம் zippy car- யினை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்த வேளையில், சில காரணங்கள் அறிமுகப்படுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ் தொற்றின் அபாயம் குறித்து சர்வதேச அளவிலான எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில், டாடா நிறுவனம், தனது புதிய காரின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. அதேசமயம் அந்த புதிய ரக காரின் பெயர் விவரங்களை டாடா வெளியிடவில்லை. பிரேஸிலில் ஸீகா வைரஸ் காரணமாக, கருவில் இருக்கும் சிசுக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சுறுத்தல் அதிகரித்துவரும் சூழலில், பாதிக்கப்பட்டவர்களுக்கான தமது அனுதாபத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கில், தமது புதிய காருக்கு வைக்க திட்டமிட்டிருந்த ஜிகா எனும் பெயரை, டாடா மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. |