பிக்பாஸ் 3வது சீசனில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது அடுத்த மாதம் தெரிந்துவிடும். ஆனால் நம் மக்களுக்கு முன்பே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
அதனால் பிக்பாஸ் பற்றி நிறைய செய்திகள் படிக்க ஆசைப்படுகிறார்கள். தொலைக்காட்சியும் நிகழ்ச்சிக்காக பலரை அணுகியுள்ளனர், அதில் ஒருவர் ஆனந்தி. நடன நிகழ்ச்சி, தலையணைப் பூக்கள் சீரியல், பின் சில படங்கள் நடித்து பிரபலமானவர் ஆனந்தி.
இவரையும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தொலைக்காட்சி அணுகியுள்ளனர்.
இதுகுறித்து அவர், வீட்டிற்குள் இருந்து சமாளிப்பது எல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் என் மகனை விட்டு பிரிந்து இருப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம், ஒருநாள் கூட அவனை பிரிந்தது இல்லை.
அதனால் வேறு வழியில்லாமல் பிக்பாஸ் வாய்ப்பை மறுத்துள்ளதாக கூறியுள்ளார்.