தமிழன் விட்டுச்சென்ற எவ்வளவோ வரலாற்று பதிவுகள் இன்று விஞ்ஞான ரீதியாக நிரூபணம் ஆகியுள்ளது.
அதே வகையில் அவன் வேற்றுகிரகவாசிகள் பற்றியும் தெரிந்து வைத்திருக்ககூடும் என்பதில் ஆச்சரியமில்லை.
தமிழரின் சங்க காலத்தமிழ் நூல் தொகுப்புகளில் புறநானூறு எனும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒர் சங்கத் தமிழ் நூலாகும்.
இதில் ஒரு பாடல் பின்வருமாறு அமையப்பெறுகின்றது.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான வூர்தி எய்துப
பொருள்: புலவர்கள் பாடும் புகழ் உடைய வானவர்கள் வான் வெளியில் சாரதி இல்லாத தேரில் ஏறி வருவார்கள்.
அப்படியென்றால் தேரோட்டி இல்லாத தேர் என தமிழன் பறக்கும்தட்டை கூறியிருப்பானோ தெரியவில்லை, நமது புராணம் மற்றும் இதிகாசங்களில் வரும் தோற்றபாடுகளும் இவ்வாறு தான் அமைகின்றது.
அவ்வாறு எனின் வேற்றுகிரகவாசிகளை தான் நாம் கடவுளாக வணங்குகின்றோம்?.