பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘நையாண்டி’ உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வேல்ராஜ். இவர் தற்போது தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கியுள்ளார்.
இப்படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிக்கிறார். எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார் வேல்ராஜ். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.
‘வேலையில்லா பட்டதாரி’ தனுஷ் நடிக்கும் 25வது படம். எனவே, இப்பட வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிக ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீஸரும், பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து நல்லவரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் ரிலீஸ் ஆகலாம் எனத் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.
விரைவில் இப்பட ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது