ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் விஜய்!

149

நண்பன் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் தளபதி விஜய் என கோடம்பாக்கம் பரபரக்கிறது.

இந்தியன் 2  படம் அறிப்பிலிருந்தே அந்த படம் பிரச்சனையில் இருந்து வருகிறது. இந்தப் படத்தை முதலில் தில் ராஜீ எனும் தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இடையில் புகுந்த லைகா நிறுவனம் பெரும் தொகை கொடுத்து இப்படத்தை தயாரிக்க வாங்கியது.

2.0 படத்தின் குறைவான வசூல் முதலில் அவர்களை மிரளச்செய்தது. ஆனாலும் கமல் ஷங்கர் கூட்டணி மீதான நம்பிக்கையில் ஷங்கருடன் மேற்கொண்ட தீர்மான அடிப்படையில் இந்தியன் 2 படத்தை தயாரிக்க ஆரம்பித்தார்கள். கமல் அரசியலில் பிஸியாக அவரின் அரசியல் பிரவேசம் ரஜினியின் காலாவைப் பாதித்தது போல் பாதிக்குமோ என பயந்தார்கள்.

அதை தாண்டி நடந்த பூஜையும், சில நாட்கள் படப்பிடிப்புமாக படம் முன்னேறிய போது கமலின் உடல் பருமனும் மேக்கப்பும் சுத்தமாக செட்டாகவில்லை என ஷங்கர் மொத்தமாக படப்பிடிப்பை நிறுத்திவிட படம் அந்தரத்தில் நின்றது. மீண்டும் எல்லா விசயங்களையும் சரிசெய்து படப்பிடிப்பிற்கு தயாராகிய போது கமல் நாடாளுமன்ற தேர்தலில் பிஸியாகிவிட்டார். அப்போது நின்ற படம் மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை

இந்த நிலையில் தான் ஷங்கர் இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். இந்தியன் 2 விற்கு முன் இளைய நடிகர்களை வைத்து ஒரு படத்தை எடுத்து விட முடிவெடுத்திருக்கிறார். இரட்டை கதாநாயகர்கள் கொண்ட அந்த கதையில் நடிக்க விஜய்யையும், விக்ரமையும் அணுகியிருக்கிறார்.

வெல்லம் திங்க கசக்காவா போகிறது. அட்லி இயக்கத்தில் நடித்து வரும் விஜய் ஷங்கர் இயக்கத்தில் படம் என்றவுடன் தன் அடுத்த கமிட்மெண்ட்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு உடனடியாக ஓகே சொல்லியிருக்கிறார். கடாரம் கொண்டான் முடிந்த நிலையில் தன் மகன் நடிக்கும் படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்த விக்ரமும் ஓகே சொல்லிவிட்டார்.

இப்போது அந்தப்படத்தின் முதற்கட்ட வேலைகளை துவங்கி விட்டாராம் ஷங்கர். முழுக்க உறுதியாகி விட்ட இந்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமாம். ஷங்கர், விஜய், விக்ரம் கூட்டணியில் படம் என்பதை கேள்விப்பட்டு ரசிகரகள் இப்போதே கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அந்தப்படம், நண்பன், ஐ ஆகிய படங்களின் கலவையா? இல்லை இன்றைய தலைமுறையின் முக்கிய கதையா என்பது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE