தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டாராக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
கடைசியாக இவரது நடிப்பில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் நடித்த ஜவான் திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து நயன்தாராவிற்கு பாலிவுட்டில் பெரிய ரீச் கொடுத்துள்ளது.
அடுத்தடுத்தும் நிறைய படங்களில் பிஸியாக நடித்துவரும் நயன்தாரா மலையாளத்திலும் படங்கள் கமிட்டாகி வருகிறார்.
வாட்ச் விலை
நடிகை நயன்தாரா இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணத்தில் விக்னேஷ் சிவனுடன் வந்தார். அதில் அவர் இளஞ்சிவப்பு நிற புடவை அணிந்து வெள்ளி நிறத்தில் கனமான நெக்பீஸ் அணிந்து வந்திருந்தார்.
அதோடு திருமண ரிசப்ஷனில் நடிகை நயன்தாரா ஒரு ஆடம்பர வாட்ச் அணிந்து வந்தார், அது அனைவரையும் கவர்ந்தது. அவர் அணிந்த வாட்ச் ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் 36. பிங்க் நிற டயல் மற்றும் சிப்பி பிரேஸ்லெட் கொண்டது.
Oystersteel என்ற உலோகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வாட்ச் எப்போதும் மினுமினுப்புடன் கண்களைப் பறிக்கும் அழகுடன் இருக்கும். இந்த ஸ்டைலிஷ் வாட்ச் விலை ரூ.5.30 லட்சம் என்று கூறப்படுகிறது.