ஷாஜகான் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. கணவர், பிள்ளையுடன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

154

 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஒன்று ஷாஜகான். இப்படத்தை ரவி என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ரிச்சா பலோட், விவேக், கிருஷ்ணா, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் கதாநாயகியாக நடித்து 90ஸ் கிட்ஸ் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ரிச்சா பலோட்.

சிறு வயதிலிருந்தே நடிக்க துவங்கிய நடிகை ரிச்சா பலோட், தெலுங்கு சினிமா மூலம் தான் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

கணவர், பிள்ளையுடன் நடிகை ரிச்சா
இவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஹிமன்ஷு பஜாஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

திருமணத்திற்கு பின் பெரிதும் சினிமா பக்கம் அவரது ரிச்சா பலோட், 2020ல் வெளிவந்த ஒரு வெப் தொடரில் மட்டும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகை ரிச்சா பலோட் தனது கணவர் மற்றும் பிள்ளையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE