ஷாலினியிடம் அஜித் எப்படி காதலை கூறினார் தெரியுமா.. இப்படியொரு ப்ரொபோஸ் யாருமே பண்ணிருக்க மாட்டீங்க

130

 

திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக இருப்பவர்கள் அஜித் – ஷாலினி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவ்வப்போது அஜித் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும்.

கடந்த 2000ஆம் ஆண்டு தான் நடிகை ஷாலினியை காதலித்து கரம்பிடித்தார் அஜித். ஆனால், அஜித் எப்படி தனது காதலை ஷாலினியிடம் கூறினார் என்று தெரியுமா.

அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தான் நடிகை ஷாலினியிடம் தனது காதலை அஜித் வெளியிப்படுத்தியுள்ளார். இதை அப்படத்தை இயக்கிய இயக்குனர் சரண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ப்ரொபோஸ் செய்த அஜித்
ஒரு முறை படப்பிடிப்பின் போது, இயக்குனர் சரண், ஷாலினி மற்றும் அஜித் மூவரும் ஒரே இடத்தில் Chair போட்டு அமர்ந்துள்ளனர். ஷாலினி ஒரு பக்கமும், அஜித் மறுபக்கம் இருக்க, இவர்கள் இருவருக்கும் இடையே இயக்குனர் சரண் அமர்ந்து இருந்தாராம். அப்போது அஜித் ‘படத்தை கொஞ்சம் சீக்கிரமா முடிங்க சரண்’ என்று இயக்குனர் சரண் இடம் கூறியுள்ளார். இது ஷாலினியை செவிகளில் கேட்டுள்ளது.

அதன்பின், ‘படப்பிடிப்பை சீக்கிரமா முடிங்க சரண், இல்லனா இந்த பொண்ண எங்க நான் காதலித்து விடுவேனோ என பயமாக இருக்கு, அதனால சீக்கிரமா படப்பிடிப்பை முடித்துவிடுங்க’ என கூறினாராம் அஜித். இது ஷாலினிக்கு கேட்டு அவர் முகம் ஷாக்கானதாம். இப்படி தான் ஷாலினியிடம் தனது காதலை அஜித் கூறினாராம்.

SHARE