இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஸ்டூவர்ட் பின்னி ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் அசத்தி வருகிறார். அதேபோல் அவரது மனைவியான மாயண்டி லன்ஜர்ஐபிஎல் போட்டிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் டுவிட்டரில் ஒரு ரசிகர் மாயாண்டி லன்ஜரிடம், “ஐபிஎல் போட்டிகளின் போது பின்னியை பற்றி நீங்கள் ஒன்றுமே கூறுவது இல்லை. அவர் அபாரமாக கேட்ச் பிடித்த போதும் கண்டுகொள்ளவில்லை. ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மாயாண்டி லன்ஜர் , “பொது மேடையில் அவருக்கு என்னுடைய ஆதரவு தேவையில்லை. அவரது வாழ்நாள் முழுவதும் அப்படி தான். சியர்ஸ்” என்று பதில் அளித்தார்.
@MayantiLanger_B During IPL you have never written a word about Stuart sir even when he had taken stunning catches.Why so?
@arifkaziimpish because he does not need my support on a public platform, he has it for a lifetime..cheers!
முன்னதாக ஒரு ரசிகர் டுவிட்டரில், “மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பின்னி பிடித்த கேட்சை குறிப்பிட்டு இப்போது தான் மாயாண்டி லன்ஜர் உடன் செல்ஃபி எடுக்க தகுதியான நபர்” என்று கிண்டல் அடித்தார்.
உடனே பின்னியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றிய அவரது மனைவி மாயாண்டி லன்ஜர், இதோ செல்ஃபி எடுத்தாச்சு, எங்களை கிண்டலடித்ததற்கு நன்றி என்று பதிவிட்டு பதிலடி கொடுத்தார்.