ஸ்பெயின் 14 மாடிக்குடியிருப்பில் மளமளவென பரவிய பாரிய தீ ; பொது மக்கள் சிக்கியதால் அச்சம்!

82

 

ஸ்பெயினின் வலென்சியா நகரில் 138 வீடுகள் உள்ள தொடர்மாடிக்குடியிருப்பொன்றில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு பெருமளவு மக்கள் தங்கள் வீடுகளிற்குள் சிக்குண்டிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

கம்பனார் என்ற பகுதியில் உள்ள 14 அடுக்குகளை கொண்ட தொடர்மாடிக்கட்டிடமொன்றில் பரவிய தீ அருகில் உள்ள கட்டிடங்களிற்கும் பரவியுள்ளது. இந்நிலையில் பலர் தங்கள் வீடுகளிற்குள் சிக்குண்டுள்ளனர்.

மளமளவென பரவிய தீ
இந்நிலையில் வீடுகளின் பல்கனிகளில் உள்ள மக்களை தீயணைப்பு படையினர் மீட்டுவருகின்றனர் அதேவேளை இதுவரை தீயணைப்பு படைவீரர்கள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் ஏழாம்மாடியில் வசிக்கும் தம்பதியினர் உட்பட பலரை மீட்டுள்ளனர் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாம்மாடியில் சிக்குண்டுள்ள பதின்மவயது இளைஞனை மீட்பதற்கான நடவடிக்கைகளில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். நாலாம்மாடியிலேயே முதலில் தீ மூண்டது பின்னர் தீ மிகவேகமாக பரவத்தொடங்கியது என தொடர்மாடிக்குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிக்கும் ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

பத்து நிமிடங்களில் முழுமையாக பரவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்டிடத்தில் 138 வீடுகள் உள்ளதாகவும் 450க்கும் அதிகமானவர்கள் வசிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE