ஸ்மார்ட் ஆக மாறும் சுவர் கடிகாரங்கள்

237

smart_clock_001-w245

அலைபேசி முதற்கொண்டு அனைத்தும் ஸ்மார்ட் ஆகி வருகின்ற அந்த வரிசையில் சுவர் கடிகாரம் தற்போது இடம்பிடித்துள்ளது. இந்த ஸ்மார்ட் சுவர் கடிகாரத்திற்கு ‘க்லான்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் சுவர் கடிகாரத்தை வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் கருவிகளுடன் நம்மால் இணைக்க முடியும். இதன் மூலம் நம்முடைய அன்றாட வேலைகள் மேலும் சுலபமாகும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர். ‘க்லான்ஸ்’ ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை 199 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாம் தூங்க வேண்டிய நேரம் எழ வேண்டிய நேரம் குறித்து நமக்கு நினைவூட்டுவதுடன் நமக்கான அனைத்து வேலைகள் குறித்தும் ‘க்லான்ஸ்’ நம்முடன் ஒரு மனிதனை போல உரையாட முடியும். மேலும் வானிலை குறித்த தகவல்களை நமக்கு வேண்டிய நேரத்தில் ‘க்லான்ஸ்’ அறிவிக்கின்றது.

வீட்டில் உள்ள அனைவருடைய ஆரோக்கியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நினைவூட்டும் வகையில் ‘க்லான்ஸ்’ வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

 

SHARE