அழகு, நடிப்பு திறமை இருந்தும் கதைகளை சரியாக தேர்ந்தெடுக்காமல் சினிமாவில் இருந்து காணாமல் போன பல ஹீரோக்கள் உண்டு. அப்படிபட்ட நடிகர் தான் ஸ்ரீகாந்த்.
இவர் கடந்த 2002ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளிவந்த ரோஜாக் கூட்டம் படம் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். முதல் படமே ஹிட்டாக தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வர தொங்கியது.
நண்பன் படத்துக்கு பின்னர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களும் தோல்வியை தான் தழுவியது.
இத்தனை படங்களா?
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரீகாந்த், தான் மிஸ் செய்த படங்களை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், 12 B, லிங்கு சாமி இயக்கத்தில் வெளிவந்த ரன், மணிரத்தினத்தின் ஆயுத எழுத்து பட வாய்ப்பையும் மிஸ் செய்துவிட்டேன். அஜித் சாருக்கு அப்பறம் நான் கடவுள் படத்தில் நான் நடிக்க இருந்தேன் ஆனால் கடைசியில் அந்த வாய்ப்பும் மிஸ் ஆனது.
எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் கதை எனக்காக தெலுங்கில் எழுதப்பட்டது காரணங்களால் அதை பண்ண முடியாமல் போனது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.