ஸ்ரீபிரியாவை சந்தேகப்பட்ட நதியா 

480




ஸ்ரீபிரியா டைரக்டு செய்வாரா என்று சந்தேகப்பட்டார் நதியா. 90களில் ஹீரோயினாக வலம் வந்த நதியா தற்போது அம்மா, அண்ணி வேடங்களில் நடிக்கிறார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். தற்போது ஸ்ரீபிரியா இயக்கும் திரிஷ்யா என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: அமைதியான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த எனக்கு திரிஷ்யா படத்தில் அதிகார தோரணையுடன் கூடிய போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். இது மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் ரீமேக்.

அப்படத்தை நான் பார்த்திருக்கிறேன். தெலுங்கில் நடிகை ஸ்ரீபிரியா இயக்கப்போகிறார் என்று அறிந்தேன். அவர் என்னை நடிக்க கேட்டபோது இப்படத்தை அவரால் இயக்க முடியுமா என்று முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அந்த சந்தேகம் படப்பிடிப்பு தளத்தில் அவர் பணியாற்றிய விதத்தை பார்த்தவுடனே தீர்ந்துவிட்டது.

ஆணாதிக்கம் நிறைந்த திரையுலகில் ஒரு பெண் சாதிப்பது பெரிய விஷயம். வெற்றிதான் அதிகளவில் பெண்களை இத்துறைக்கு கொண்டு வரும். அந்த வகையில் இப்படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். இவ்வாறு நதியா கூறினார்

 

SHARE