ஸ்ருதியை வெளியேற்றிய லட்சுமி மேனன் 

411




விஷால் படத்திலிருந்து ஸ்ருதியை வெளியேற்றிவிட்டு ஹீரோயின் ஆனார் லட்சுமிமேனன்.விஷால்-ஸ்ருதி ஹாசன் இணைந்து ‘பூஜை என்ற படத்தில் நடித்து வருகின்றனர். ஹரி இயக்கும் இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கிறார் விஷால். இதிலும் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக அதில் மாற்றம் செய்திருக்கிறார் இயக்குனர். ஸ்ருதிக்கு பதிலாக லட்சுமி மேனனை ஹீரோயினாக தேர்வு செய்திருக்கிறார்.ஏற்கனவே விஷாலுடன் ‘பாண்டியநாடு‘, ‘நான் சிவப்பு மனிதன் படங்களில் லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். அத்துடன் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. இருவருக்கும் காதல் என்ற கிசுகிசுவும் பரவியது.

 

இதெல்லாம் இந்த ஜோடிக்கு பிளஸ் ஆக இருக்கும் என்று ஒரு கணக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. ‘பாண்டியநாடு‘ படத்தை பொறுத்தவரை விஷால், லட்சுமிமேனன், சுசீந்திரன் இணைந்த படம் ஆகும். அது ஹிட்டானதால் அந்த ராசி இந்த படத்துக்கும் ஒர்க்அவுட் ஆகும் என்று சுசீந்திரன் எண்ணுவதாக கூறப்படுகிறது. ஸ்ருதிக்கு பதிலாக லட்சுமிமேனன் நடிப்பது உண்மையா என்று விஷாலிடம் கேட்டதற்கு, ‘உண்மைதான். படத்தில் ஹீரோயினுக்கு குறைந்தளவே கேரக்டர் உள்ளது. ஏற்கனவே பாண்டியநாடு ஹிட் ஆகி இருப்பதால் லட்சுமிமேனன் காம்பினேஷன் பொருத்தமாக இருக்கும் என்று யூனிட்டார் கருதுகின்றனர் என்றார்.

 

SHARE