பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கிண்ண டி20 லீக் போட்டியின் போது வங்கதேசத்தின் சவும்யா சர்கர் அசத்தலாக கேட்ச் பிடித்தார்.உலகக் கிண்ண டி20 லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் வங்கதேசம்- பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் பாகிஸ்தான் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆசியக் கிண்ணத் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
இந்த போட்டியின் போது 17வது ஓவரில் முகமது ஹபீஸ், பந்தை பவுண்டரிக்கு பறக்க விட்டார்.
ஆனால் வங்கதேசத்தின் சவும்யா சர்கர் அசத்தலாக கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்தார்.
|