ஹமாஸ்-இஸ்ரேல் இடையே நீண்ட கால போர் நிறுத்த ஒப்பந்தம்

438
பாலஸ்தீனத்தில் உள்ள காசா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த சில வாரங்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இது வரை 2200 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என்று எகிப்து அரசு கேட்டுக்கொண்டது. அந்நாட்டு அரசின் தீவிர முயற்சியால் அங்கு சில மணி நேரங்கள் மற்றும் சில நாட்களுக்கு போர் நிறுத்தம் அமலில் இருந்தது. எனினும் இந்த போர் நிறுத்தத்தை நீண்ட காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று இரு நாடுகளையும் எகிப்து கேட்டுக்கொண்டது. அதன்படி இரு நாடுகளும் நீண்ட கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஹமாஸ் இயக்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய மவ்சா அபு மர்சாவ்க் கூறினார்.

மேலும் தாங்கள் முற்றுகையிட்டுள்ள பகுதி வழியாக மனிதாபிமான உதவிகள் செய்வதற்கும், கட்டிட பொருட்களை அனுப்புவதற்கும் இஸ்ரேல் வழி விட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து எவ்வித கருத்தையும் இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.

SHARE