இது அமெரிக்கா அல்ல இந்தியா. இங்கு ஆபாச படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று மறுக்கப்பட்டது. ஹாலிவுட் செக்ஸ் காமெடி படமாக உருவாகி இருக்கிறது. செக்ஸ் டேப். கேமரன் தியாஸ், ஜாசன் சேகெல் நடித்திருக்கின்றனர். இப்படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள சென்சார் போர்டில் தணிக்கை சான்றிதழுக்காக மனு செய்யப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். படத்தின் முதல் 30 நிமிடம் ஆபாச காட்சிகளாக இருந்ததை கண்டு அதிகாரிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இறுதியில் இப்படத்துக்கு சான்றிதழ் தர மறுத்தனர்.இதையடுத்து ரிவைசிங் கமிட்டியிடம் அனுமதி கேட்க படத்தை திரையிட்டனர். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இம்மாத இறுதியில் இப்படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அது தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.நடுவர் குழுவிடம் அனுமதிகேட்டு மனு செய்யப்படுமா என்று கேட்டபோது, ரிவைசிங் கமிட்டி சான்றிதழ் தர மறுத்து தள்ளுபடி செய்துவிட்டது. இப்படம் கலாசார ரீதியாக ஒரு உணர்வுபூர்வமான படம் கிடையாது.
இதில் சமூக கருத்து எதுவும் இல்லை. எனவே நடுவர் குழுவுக்கு செல்லும் எண்ணம் இல்லை என்றார். இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது,இந்தியா என்பது அமெரிக்கா போன்றதல்ல. அமெரிக்காவில் என்னவெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதெல்லாம் இந்தியாவில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தேவை எதுவும் இல்லை என்றார்