ஹீரோயினுக்கு சீனியர் நடிகை அட்வைஸ் 

495




நல்ல பேர் வாங்கினால் நிலைக்கலாம் என்று ஹீரோயினுக்கு சீனியர் நடிகை சரண்யா அட்வைஸ் தந்தார். படத்துக்கு படம் ஒன்று அல்லது இரண்டு ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் பலர் காணாமல்போய்விடுகின்றனர். நாயகன் படத்தில் கமல் ஜோடியாக அறிமுகமான சரண்யா இன்றைக்கும் நிலைத்து இருக்கிறார். சமீபத்தில் நடந்த பப்பாளி பட ஷூட்டிங்கில்  ஹீரோ செந்தில், ஹீரோயின் இஷாரா பங்கேற்று நடித்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது நடந்த சம்பவம்பற்றி இயக்குனர் ஏ.கோவிந்தமூர்த்தி கூறியதாவது: படங்களில் மாமியார் என்றாலே கொடுமை செய்பவர்களாக காட்டப்படுகிறார்கள்.

 

இப்படத்தில் மாமியார் என்பவர் அம்மாபோல் நல்லவர் என்று சித்தரிக்கப்படுகிறது. இந்த வேடத்தில் சரண்யா நடிக்கிறார். நல்ல அம்மாவாக வேடம் ஏற்றுவந்த அவரை இனி நல்ல மாமியார் என்று சொல்வார்கள். நிலையான இடத்தை பிடித்ததுபற்றி அவர் கூறும்போது,சீனியர்களையும், டெக்னீ ஷியன்களையும் மதிக்க தெரிந்தாலே ஹீரோயினால் நிலைக்க முடியும் என்றார். அந்த அட்வைஸ் இப்பட ஹீரோயின் இஷாராவுக்கு மட்டுமல்ல இளம் நடிகைகள் பலருக்குமான அட்வைசாக இருந்தது. அம்பேத்குமார், ரஞ்ஜீவ் மேனன் படத்தை தயாரிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 

SHARE