ஹொரணை – நாரகல பகுதியில் களுகங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு

226

ஹொரணை – நாரகல பகுதியில் களுகங்கையில் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புளத்சிங்கள  பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புளத்சிங்க பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலத்திற்கு அருகில் இருந்து பாதணிகள் மற்றும் துவிச்சக்கரவண்டியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE