வீட்டு வேலைக்காரனை காதலித்ததால், பெற்றோரால் கொலை செய்யப்பட்டவர் ஆருக்ஷி. இந்தியா முழுவரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர்கள் ராஜேஷ்தல்வார், நூர் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு தற்போது ஜெயிலில் உள்ளனர்.
இந்த நிலையில், ஏதாவது பரபரப்பான சம்பவங்கள் கிடைக்குமா? என்று அலைந்து கொண்டிருக்கும் சினிமாக்காரர்களுக்கு ஆருஷியின் கொலை சம்பவம் நல்லதொரு கதைக்களமாக அமைய அதை மையமாக வைத்து ஒரு இந்திப்பட இயக்குனர் ரகசியா என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். தற்போது அப்படம் ரிலீசுக்கும் தயாராகி விட்டதாம்.
ஆனால், அப்படம் ஆருஷியின் கதையில் படமாகியிருக்கிற சேதியை அறிந்த ஆருஷியின் பெற்றோர், அதற்கு தடை கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த படம் எங்களை மேலும் வேதனைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்றும் அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்களாம். இதையடுத்து, ரகசியா படத்தை வெளியிடுவதற்கு மும்பை கோர்ட் இடைக்கால தடை விதித்திருக்கிறது