1 நிமிடத்தில் 19 ஆடைகள் மாற்றிய மேஜிக் மங்கைகள். அசத்தலான வீடியோ

486

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

சீனாவை சேர்ந்த இரண்டு மேஜிக் மங்கைகள் 1 நிமிடத்தில் 19 ஆடைகளை மாற்றி உலகசாதனை படைத்துள்ளனர்.

உஹான் நகரில் உள்ள ‘ஹேப்பி வேலி’ எனும் பொழுதுப்போக்குப் பூங்காவில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இதில் மலேசிய நாட்டை சேர்ந்த அவேரி சின் மற்றும் சில்வியா லிம் ஆகிய மேஜிக் மங்கைகள் கலந்துகொண்டனர்.

இதில், மேடையில் ஒரு பெண் தோன்ற, மற்றொரு பெண் உறையால் அப்பெண்ணை மறைத்துக்கொண்டார். இவர் அந்த உறையை மேலே எழுப்பி கீழே இறக்குகையில் உறைக்குள் மறைக்கப்பட்டிருந்த பெண், ஒவ்வொரு ஆடைகளோடும் தோன்றுகிறார்.

1 நிடத்தில் 19 ஆடைகளை மாற்றியிருக்கிறார். இதில், முதல் அணிந்திருந்த ஆடைகளின் அடையாளம், அடுத்த ஆடையை அணியும் போது தெரியக்கூடாது என்பதில் சிறப்பாக கையாண்டுள்ளனர்.

SHARE