1-3 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது கோஸ்ட்டரிக்கா

466
2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் நான்காவது ஆட்டம் இன்று போர்ட்டாலிஜா-வில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. ‘டி’ பிரிவு போட்டியான இதில் உருகுவே அணியும் கோஸ்ட்டரிக்கா அணியும் மோதின.

ஆட்டம் தொட்ங்கிய 24வது நிமிடத்தில் பெணால்டி ஷாட்டின் மூலம் ஒரு கோல் அடித்த உருகுவே, அடுத்த கோலுக்கான சந்தர்பத்தை எதிர்நோக்கி பரபரப்பாக விளையாடியது.  54வது நிமிடத்தில் கோஸ்ட்டரிக்கா வீரர் கேம்ப்பெல் அடித்த கோலால் இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையை எட்டின.

அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்த கோஸ்ட்டரிக்கா, ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.

SHARE