10 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து தாக்கும் ஏவுகணை: சீனா தயாரித்து சோதனை

438

சீனா விண்வெளி, போக்குவரத்து மற்றும் அணு ஆயுதம் உள்ளிட்ட பல துறைகளில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. பல ஏவுகணைகளை தயாரித்து சோதனை நடத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது டாங்பெங், 31 பி என்ற அதி சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்துள்ளது. இது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்தது.

இது 10 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை குறி பார்த்து தாக்க கூடியது. இதன் சோதனையை சீனா விடுதலை படை என்றழைக்கப்படும் ராணுவம் தேசிய தினத்தையொட்டி வெற்றிகரமாக நடத்தியது.

இந்த சோதனை சாங்ஸி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கை கோள் ஏவுகணை செலுத்தும் மையத்தில் இருந்து கடந்த மாதம் (செப்டம்பர்) 25–ந்தேதி நடத்தப்பட்டது.

டாங்பெங் –31 பி ஏவுகணை 3 அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய திறன் படைத்தது. இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை நகரங்கள் மற்றும் ஐரோப்பிய நகரங்களையும் தாக்க முடியும்.

SHARE