10 நிமிடம் charge செய்தால் 200கிமீ range தரும் புதிய எலக்ட்ரிக் கார் மொடலை BYD இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
சீனாவின் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான BYD, இந்திய சந்தையில் புதிய மொடலை அறிமுகம் செய்துள்ளது.
Dynamic Range, Premium Range மற்றும் Performance variant என மூன்று பதிப்புகளில் கிடைக்கும் இந்த புதிய கார், பிரிமியம் அம்சங்களையும், ஒருமுறை சார்ஜ் செய்தால் 650 கிலோமீட்டர் மைலேஜையும் வழங்கும் என்று BYD நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கார் வெறும் 15 நிமிடம் சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் பயணிக்கக்கூடியது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
10 நிமிடம் charge செய்தால் 200கிமீ ஓடும்., BYD Seal EV இந்தியாவில் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?
இந்த காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஹோம் சார்ஜர் மற்றும் வாரண்டி பலன்களை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Seal எலக்ட்ரிக் செடான் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த மாடலின் ஆரம்ப விலையை ரூ.41 லட்சமாக நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த விலைகள் டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆகும்.
கூடுதல் இடம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட BYD-ன் மூன்றாவது மொடல் இது.
அம்சங்கள்
இந்த கார் வெறும் 3.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் மற்றும் இதன் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 650 கிமீ பயணிக்கும்.
இந்த காரை முன்பதிவு செய்ய ரூ.1.25 லட்சம் செலவாகும்.
மார்ச் 31-ஆம் திகதிக்கு முன் முன்பதிவு செய்பவர்களுக்கு 7 KW Charger மற்றும் 3 KW Portable Charger மற்றும் mobile power supply unit இலவசமாக வழங்கப்படுகிறது.
10 நிமிடம் charge செய்தால் 200கிமீ ஓடும்., BYD Seal EV இந்தியாவில் அறிமுகம்., விலை என்ன தெரியுமா?
Road assistance-உடன் ஒருமுறை சேவை இலவசமாக செய்யப்படும்.
இந்த கார் பேட்டரியில் 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோமீட்டர்கள், மோட்டார்/மோட்டார் கன்ட்ரோலரில் 8 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிலோமீட்டர்கள் மற்றும் DC அசெம்பிளியில் 8 ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிலோமீட்டர்கள் உத்தரவாதத்துடன் வருகிறது.