10 வருடங்கள் டேட்டிங்.. காதலனுடன் நடிகை டாப்சீக்கு திருமணம்! எப்போது தெரியுமா

140

 

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் டாப்ஸி. இதன்பின் அஜித்தின் ஆரம்பம், கேம் ஓவர், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி தற்போது மூன்று இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் டாப்ஸிக்கு விரைவில் திருமணம் என பல செய்திகள் இதுவரை வெளிவந்துள்ளது. தன்னுடைய காதலரை கரம்பிடிக்க போகிறார் என கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து நடிகை டாப்ஸி இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

காதலுடன் திருமணம்
இந்த நிலையில், இம்மாதம் நடிகை டாப்ஸி தனது காதலர் Mathias Boe-வுடன் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என பாலிவுட் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், இம்மாதம் இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்களாம். இவர்களுடைய திருமணம் உதய்பூரில் நடைபெறும் என்றும் திரையுலக நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

SHARE