1000 கோடி செலவில் தமிழகத்தில் Gorilla Glass உற்பத்தி ஆலை: Corning Inc நிறுவனம் முதலீடு

133

 

Corning Inc நிறுவனம் Gorilla Glass உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை
லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற தொழில்நுட்பங்களின் திரைகளுக்கு மேல் பயன்படுத்தும் கண்ணாடி தான் இந்த கொரில்லா கண்ணாடிகள்(Gorilla Glass ).

இந்த கொரில்லா கண்ணாடிகள் எளிதில் உடைந்து விடாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், இவை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடன் நேரடி நன்மதிப்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் ஐபோன்கள் மற்றும் பிற ஸ்மார்ட்போன்கள் லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் Gorilla Glass எனப்படும் திரைக் கண்ணாடிகளை உருவாக்கும் தொழிற்சாலையில் தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக Corning Inc என்ற தயாரிப்பு நிறுவனம் Gorilla Glass உற்பத்தி ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த உற்பத்தி ஆலை 25 ஏக்கர் நிலப்பரப்பில் சென்னை ஶ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கத்தில் நிறுவ ஏற்பட்டுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தொழிற்சாலை 300 பேர் வரை பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE