ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை-சுப்பிரமணியன் சுவாமி

471

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான். அது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

10514689_538077679659880_6576865221205954715_n

பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. இது நான் எதிர்பார்த்தது தான்.

காலையில் எனது ட்விட்டர் வலைதளத்திலும் கூட இதனைத்தான் பதிவு செய்திருந்தேன். நான் கணித்தது போலவே, ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசு வழக்கறிஞருக்கு மட்டும்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அவர்தான் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

10177446_788202094570246_7420238566728014188_n

ஆனால், அதனை அவர் செய்யாதது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனினும், இந்த விவகாரத்தில் நீதிபதி சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். கர்நாடக நீதிமன்றம் மிக சரியான உத்தரவை பிறப்பித்துள்ளது என கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

SHARE