இந்திய கால்பந்து வீரர் பிஜாய் சேத்ரி உருகுவேயின் கிளப் அணியில் இணைந்து சாதித்துள்ளார்.
பிஜாய் சேத்ரி
இந்திய கால்பந்து கிளப் அணியான ஷில்லாங் லாஜுங்கில் விளையாடி வரும் இளம் வீரர் பிஜாய் சேத்ரி.
மணிப்பூர் மாநிலத்தைச் 22 வயதான இவர், இந்த அணியில் 2016ஆம் ஆண்டு தனது கால்பந்து வாழ்வைத் தொடங்கினார்.
இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான உருகுவேயின் கால்பந்து கிளப் அணியில் பிஜாய் சேத்ரி இணைந்துள்ளார்.
இதன்மூலம் லத்தீன் அமெரிக்க கிளப்பில் கையெழுத்திட்ட முதல் இந்திய கால்பந்து வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
பழமை வாய்ந்த கிளப்
சுமார் 117 ஆண்டுகள் பழமை வாய்ந்த Colon Futbol Club அணியில்தான் பிஜாய் விளையாட உள்ளார்.
இதுகுறித்து பிஜாய் சேத்ரி கூறுகையில், ”எனது தொழில் வாழ்க்கையில் புதிய சவாலுக்கான இந்த வாய்ப்பைப் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது ஆட்டத்தை மேம்படுத்தவும், Colon FC என் மீது காட்டிய நம்பிக்கையை திருப்பி செலுத்தவும், இந்திய கொடியை உயரப் பறக்க வைப்பதற்கும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நான் சிறப்பாக செயல்பட்டால், எதிர்கால இந்திய வீரர்களும் வெளிநாடுகளுக்கு செல்ல வழி வகுக்கும் என்பதை நான் நன்கு அறிவேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.