அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த க

482

CVK-Sivagnanamவடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் படையினரின் தேவைகளுக்காகவும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் 67 ஆயிரம் ஏக்கர் நலத்தை விடுவிக்கக்கோரி வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ம் திகதி மாகாண சபையில் நடைபெற்ற நிலம் தொடர்பிலான விசேட அமர்வின்போது வடக்கில் 67ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இந்த நிலத்திலிருந்து படையினர் மற்றும் குடியேற்றவாசிகள் வெளியேற வேண்டும், மேலும் நிலம் தொடர்பில் மாகாண சபைகளுக்குள்ள உரித்தை வழங்க வேண்டும் என இரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில், இன்றைய தினம் மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த கடிதத்தில் 26.07.1957ம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்தம், மற்றும் 24.03.1965 ம் ஆண்டு டட்லி- செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட நிலம் தொடர்பான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய- இலங்கை ஒப்பந்தம், சந்திரிக்காவின் அதிகாரப் பரவலாக்கல் முன்மொழிவு, போன்றவற்றில் குறிப்பிடப்பட்ட நிலம் தொடர்பான விடயங்களும் முழுமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக கடந்த 12ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் வடமாகாண சபையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கைப்பற்றுவார்கள் என முன்னரே தெரியும். ஆனாலும் வடக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமையினை வழங்க வேண்டும் என்னும் அடிப் படையிலேயே வடக்கு தேர்தலை நடத்தினேன் என கூறிய விடயத்தைச் சுட்டிக்காட்டி, இத்தகைய மேலான நன்நோக்குடன் கூடிய அணுகுமுறையினை நாம் பாராட்ட வேண்டுமானால் எமது சபைக்கு சட்டத்தினால் வழங்கப்பட்ட பலம், அதிகாரம், உரிமைகள் மற்றும் எமக்குரிய வகிபாகம் போன்றவற்றை நடைமுறைக்கிடுவதை ஜனாதிபதியாகிய தாங்கள் அனுமதிக்க வேண்டும். மேலும் மாகாணசபையின் வினைத்திறனான நிர்வாகத்திற்கு பிரதான தடைக் கல்லாக இருப்பது அலட்சியப் போக்கும், நடத்தை கெட்டதுமான மத்திய அரசாங்கத்தின் நிரல் அமைச்சுக்களினதும், திணைக்களங்களினதும் அதிகாரிகளின் செயற்பாடே. இவ்வாறு செயற்பட அவர்கள் விரும்பாதபோதும், அவ்வாறு செயற்படுமாறு அறிவுறுத்தல்களும், அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றமையினால் அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றார்கள். எனவே அத்தகைய அலுவலர்கள் தடையற்ற ஒத்துழைப்பினை மாகாணசபைக்கு வழங்க வேண்டும் என பகிரங்கமான உத்தரவினை வழங்கி, தங்கள் நல்லெண்ணத்தினை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

SHARE