13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தத் தாம் தயாராக இருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

445

13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தத் தாம் தயாராக இருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் வரும் 2015 ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் நிராகரிக்க தவறியுள்ளார். இந்தியாவின் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.

12-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்தித்தது குறித்து தான் சீற்றமடைந்தார் என வெளியான கருத்துக்களை நிராகரித்துள்ள ஜனாதிபதி ஜனநாயகத்தில் எவரையும் சந்திப்பதற்கான உரிமையுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத் தொடரின்போது இந்தியப் பிரதமரை தான் சந்திக்க விருப்பம் கொண்டுள்ளார் எனக் கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் வாக்கெடுப்பின்போது இந்தியா எடுத்த நிலைப்பாட்டுக்கு தான் நன்றியுடையவர் எனவும் தெரிவித்துள்ளார்.

pol-cartoon

 

எங்களது அரசாங்கம் யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளூரில் விசாரணையை முன்னெடுக்கிறது. இதனால் விசாரணைகளை சர்வதேச மயப்படுத்த விடமாட்டோம் என்றும் அந்த நேர்காணலில் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார். தவிர அடுத்த முறை மனித உரிமைகள் கவுன்ஸில் காஷ்மீர் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம் எனத் தெரிவிக்கும் அவ்வேளை எங்களது நிலைப்பாடு என்னவாகயிருக்கும், இந்தியாவோ அல்லது இலங்கையோ எதுவாக இருந்தாலும் தாங்கள் வெளிநாட்டு விசாரணைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறினார்.

அத்துடன் காணமற்போன 20 ஆயிரம் பேர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன எனக் கூறியதுடன் பிரபாகரனின் மகன் பாலசந்திரனின் மரணத்திற்க்கு யார் காரணம் என்பது குறித்து இன்னமும் தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாலச்சந்திரன் விவகாரம் குறித்து நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். இராணுவம் இதனை செய்திருக்கும் எனத் தாம் கருதவில்லை என்றும், எனினும் இது உண்மையா என்பது தனக்குத் தெரியவேண்டும் என்பதற்காக விசாரணை செய்கிறோம் எனக் கூறிய மஹிந்த ராஜபக்‌ஷ யுத்தத்தில் இரு தரப்பும் மோதலில் ஈடுபடும்போது யார் சுட்டிருப்பார்கள் என எப்படி தெரிவிப்பது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

TPN NEWS

SHARE