நடிகைகள் சினிமாவில் இருந்து விலகுவது ஈஸியான விஷயம் கிடையாது, ரசிகர்களும் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் அண்மையில் தான் சினிமாவில் இருந்து விலகுவதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தவர் நடிகை சார்மி. தெலுங்கு சினிமாவில் நிறைய வெற்றி படங்கள் கொடுத்துள்ள இவர் தமிழிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் கூட திரிஷா பிறந்தநாளில் அவரை திருமணம் செய்ய விருப்பமா என்று கேட்டு டுவிட் போட பெரிய செய்தியாக பேசப்பட்டது.
இப்போது டுவிட்டரில் இவர் சினிமாவில் நுழைவதற்கு எடுத்த தனது பழைய புகைப்படங்களை போட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் 13 வருடத்திற்கு முன் சார்மி எப்படி இருந்துள்ளார் என்று ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.