முன்னணி மின்சார இரு சக்கர வாகன நிறுவனமான Orxa Energies, Mantis எனும் மின்சார மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த EV பைக்கின் விலை ரூ. 3.6 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. Orxa Mantis பைக் Fame II பிரீமியம் விலையில் இருப்பதால் மானியங்கள் கிடைக்காது. இந்த பைக்கிற்கு 1.3kW சார்ஜரை நிறுவனம் வழங்குகிறது.
Orxa Mantis-ல் 27.8bhp மின்சார மோட்டார் உள்ளது, இது 93Nm டார்க்கை தருகிறது. இது மணிக்கு 135 கிமீ வேகத்தில் செல்லும். அனால், 0 முதல் 100 கிமீ வேகத்தை அடைய 8.9 வினாடிகள் ஆகும். மோட்டார் லிக்விட்-கூல்டு ஆகும், இது இந்திய சந்தையில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் ஆகும்.
மோட்டார் அளவு எடையை குறைத்துள்ளது. இதன் எடை 11.5 கிலோ மட்டுமே. 8.9kW பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. Mantis EV பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 221 கிமீ ரேஞ்ச் வழங்குகிறது.
இந்த பைக்குடன் ஒரு 3.3kW பாஸ்ட் சார்ஜர் கிடைக்கிறது. செலுத்த வேண்டிய கூடுதல் பிரீமியத்தை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. Orxa நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் Mantis டெலிவரியைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. Orxa Mantis முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10,000க்கு முன்பதிவு செய்யப்படும், அது படிப்படியாக ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும்.