14 வயது முன்னாள் காதலனை கொலை செய்யத் தூண்டிய பெண்ணுக்கு பரோல்

95

 

கனடாவில், முன்னாள் காதலனை கொலை செய்யுமாறு காதலனுக்கு அழுத்தம் பிரயோகித்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வந்த பெண் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மெலிஸா டொட்ரோவிக் என்ற பெண்ணுக்கு இவ்வாறு 15 நாட்கள் பரோலில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நான்கு தடவைகள் இவ்வாறு பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் கடந்த 2009ம் ஆண்டில் 14 வயதான ஸ்டெபெனி ரென்ஜெல் என்ற முன்னாள் காதலனை கொலை செய்ய உத்தரவிட்டமைக்காக நீதிமன்றம் டொட்ரோவிக்கிற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கொலையை செய்த காதலன் மற்றும் கொலைக்கு உத்தரவிட்ட டொட்ரோவிக் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

SHARE