14 வருடங்கள் கழித்து விஜய் செய்யும் விஷயம்.. கேரளா ரசிகர்கள் கொண்டாட்டம்

97

 

நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். தமிழ்நாடு போலவே கேரளாவில் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

விஜய்யின் படங்களை கேரள ரசிகர்களும் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். பேனர், கட்அவுட் என தியேட்டரே விஜய் ரசிகர்களால் திருவிழா போல மாறிவிடும்.

கேரளா செல்லும் விஜய்
தற்போது விஜய் நடித்துவரும் GOAT படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

இதனால் 14 வருடங்கள் கழித்து கேரளாவுக்கு செல்கிறார் விஜய். இதற்கு முன் காவலன் படப்பிடிப்புக்காக விஜய் கேரளா சென்றது குறிப்பிடத்தக்கது.

SHARE