கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் அருந்தவபாலனுக்கு வைக்கப்படப்போகும் அடுத்த செக்மேற் தமிழரசுக்கட்சி க்கு பேராபத்து

345

 

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் அருந்தவபாலனுக்கு வைக்கப்படப்போகும் அடுத்த செக்மேற் தமிழரசுக்கட்சி க்கு பேராபத்து தனது வாக்குவங்கியை பலப்படுத்த எவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எப்படி EPRLF தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனை பயன்படுத்தினாரோ அதே உத்வேகத்தோடு தற்போது அருந்தவபாலனுக்கும் கழுத்தருத்து தமிழ்தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்தி தமிழரசுக்கட்சியை சின்னபின்னமாக உடைத்து தனது கட்சியான தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியை பலப்படுத்தும் செயல்திட்டங்களை தற்போதிந்தே ஆரம்பித்துள்ளார்.

தமிழ்தேசியக்கூட்டமைப்பானது அருந்தவபாலனைத்தவிர வேறு எவரையும் தென்மராட்சியில் களம் இறக்குவார்களானாலும் தோல்வியே சற்திப்பார்கள் என்பதில் மாற்றக்கருத்து இல்லை சுமந்திரனுக்கு யாழ்மாவட்டத்தில் இருக்கக்கூடிய எதிரிகள் அனேகம் அதிலும் பழைய இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர் தேசியப்பட்டியல் அருந்தவபாலனுக்கு வழங்குவதன் ஊடாக தமிழரசுக்கட்சி தனது அரசியல் இருப்பை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ள முடியும் 

தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தர்ப்பம் பெற்றுத்தருவதாக தெரிவித்து தமிழரசுகட்சி தென்மராட்சி அமைப்பாளர் அருந்தவபாலனை மீண்டும் தமிழரசுக்கட்சி ஆதரவாளராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வேட்பாளர் நியமனம் தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கும் அருந்தவபாலனுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கினை அடுத்து அருந்தவபாலன் தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேறியிருந்தார்.

இதனை அடுத்து சாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தனது ஆதரவாளர்கள் மூலம் பிரச்சாரங்களை அவர் முன்னெடுத்துவருகின்றார்.

இந்நிலையில் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பு சந்தேகத்திற்குள்ளாகிய உள்ளுராட்சி மன்றங்களுள் ஒன்றாக சாவகச்சேரி நகரசபையுமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவமோகன், சாந்தி சிறிஸ்காந்தராசா ஆகிய இருவருக்குமிடையிலான மோதலையடுத்து தேசியப்பட்டியல் சாந்தியை தூக்கிவிட்டு அருந்தவபாலனிற்கு சந்தர்ப்பம் வழங்கவும் அதன் மூலம் அவரை மௌனிக்கவைக்கவும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏட்டிக்குப்போட்டியாக செயற்பட்டுவந்த எம்.பி சி.சிவமோகன் மற்றும் எம்பி.சாந்தி இருவரையும் ஒப்பிடுகையில், புதுக்குடியிருப்பில் 12 வட்டாரங்களில் 11 வட்டாரங்களை எம்.பி.சி.சிவமோகன் தலைமையில் வெற்றி பெற்று சபையைக் கைப்பற்றியிருந்தனர். எனினும் பாண்டியன்குளத்தில் எம்.பி.சாந்தி தலைமையில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் 08 வட்டாரங்களில் 04 வட்டாரங்களை மாத்திரமே கைப்பற்றியிருந்ததுடன், 04 வட்டாரங்கள் ஐ.தேசியக் கட்சியினர் வசமானது. துணுக்காயிலும் தோல்வியைத் தழுவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாகவிருப்பினும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி அவர்களது அரசியல் நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை. இதேநேரம் புதுக்குடியிருப்பில் ஆட்சியமைக்கும் அளவிற்கு எம்.பி.சிவமோகன் தலைமையிலான அணி வெற்றிபெற்றிருக்கிறது. இதனை அடிப்படையாகவைத்தே எதிர்காலங்களில் தேசியப்பட்டியலின் ஊடாக அருந்தவபாலனை உள்நுழைக்க முடியும் என அனைவராலும் எதிர்பார்க்கமுடிகிறது.

தமிழ் மக்களின் நலனில் அக்கறையோடு ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள். பதவிகளுக்காகவும், பணத்துக்காகவும் சோரம்போகும் அரசியல்வாதிகள் மாற்றப்படவேண்டும். தேசியம், சுயநிர்ணய உரிமையை நோக்காகக்கொண்டு தமிழ் மக்களது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இதிலிருந்து தவறுபவர்கள் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்படவேண்டும். அருந்தவபாலனை தேசியப்பட்டியல் மூலம் இணைத்துக்கொள்வதன் ஊடாக தமிழரசுக்கட்சி யாழ் மாவட்டத்தில் பாரியதொரு வெற்றியை எதிர்வரும் காலங்கில் பெற்றுக்கொள்ளும். போட்டி அரசியல் இருக்கலாம் பொறாமை அரசியல் செய்யக்கூடாது. ஒருவேளை அருந்தவபாலனை தேசியப்பட்டியல் ஊடாகக் கொண்டுவந்தால் எம்.பி.சுமந்திரனின் வாக்குவங்கி சரிந்துவிடும் என்று நினைக்கலாம் அல்லது எம்.பி.சரவணபவான், எம்.பி.சிறிதரன் போன்றோரது அடுத்த பாராளுமன்றக் கனவுகள் சிதைக்கப்படலாம் என்ற நிலைப்பாடு எழுகிறது. எது எவ்வாறாகவிருப்பினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒற்றுமை என்பது அவசியம். அந்த ஒற்றுமையின் பலத்தை சிதறடித்துவிட தீய சக்திகளுக்கு நாம் இடம்கொடுக்காது செவ்வனவே எமது அரசியல் பணிகளைச் செய்பவர்களுக்கு இடமளித்து எமது அரசியல் பயணத்தைத் தொடரவேண்டும்.

 அரசியல் இராஜதந்திரம் என்பது

தமிழர்த் தரப்பிற்கு கிடைத்த இராஜதந்திரத்திற்கான காலகட்டத்தை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது, 1980 – 1990 வரையான காலப்பகுதி. இரண்டாவது, 2001 – 2005 வரையான காலப்பகுதி. முதலாவது காலப்பகுதியில் பிராந்திய சக்தியான இந்தியா, தமிழர் விவகாரத்தில் நேரடியாக தலையீடு செய்தது. இந்த இடத்தில் நான் மேலே குறிப்பிட்ட அரசுகளுக்கு இடையிலான உறவு என்பது எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். இந்திரா காந்தி தலைமையிலான இந்திய மத்திய அரசானது, அன்றைய ஜே.ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கையுடன் முரண்பாடு கொண்டதன் விளைவாகவே, தமிழர் தரப்பிற்கு இராஜதந்திர அரசியலுடன் ஊடாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதாவது, இந்தியாவின் தலையீட்டினால் தமிழர் அரசியல் இராஜதந்திர அரசியலுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவை பின்தளமாகக் கொண்டு இராஜதந்திரத்தை கையாளுவதற்கான வாய்ப்பும் அன்றிருந்த தமிழர் தலைமைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பிரேமதாச அரசுடன் இணைந்து இந்தியாவை வெளியேற்றும் பிரபாகரனின் திட்டத்துடன் தமிழர் தரப்பிற்கான இராஜதந்திர வாய்ப்புக்கள் அற்றுப்போயின. இத்துடன் முதலாவது சந்தர்ப்பம் கைநழுவிப்போனது.

இதன் பின்னர் பிரபாகரனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் அரசியலுக்கும், இராஜதந்திரத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இருந்ததில்லை. இந்த பின்னணியில்தான் இராஜதந்திர அரசியலுடன் ஊடாடுவதற்கான சந்தர்ப்பமொன்று மீண்டும் தமிழர்த் தரப்பின் படலையை தட்டியது. முன்னர் இந்தியாவின் இடத்தில் தற்போது மேற்குலகு முகம் காட்டியது. இந்தக் காலகட்டம் ஆயுதரீதியாக பலமாக இருந்த அரசல்லாத (Non States) அமைப்புகளுக்கான கஷ்ட காலமாகும். அதாவது, அமெரிக்காவின் மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவினால் பயங்கரவாதிகளாக பட்டியல்படுத்தப்பட்டிருக்கும் அமைப்புக்களை துவம்சம் செய்வதற்கான ஒரு உலக நிலைமை உருவாகியிருந்தது. இந்தக் காலகட்டத்தை வெற்றிகரமான இராஜதந்திர நகர்வாக மாற்றிக்கொள்வதற்கான போதிய அவகாசம் இருந்தது. ஆனால், 2005இல் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சிக்கு தமிழர்களை வாக்களிக்கச் செய்யாமல் தடுத்ததன் மூலம் ரணில் அதிகார அரசியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மேற்குலகின் தயவால் விடுதலைப் புலிகளுக்கு கிடைத்த இராஜதந்திரத்திற்கான வாய்ப்பு முற்றுப்பெற்றது. இந்த இரண்டு சந்தர்ப்பங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடை மலையாகும். தமிழர் அரசியல் இராஜதந்திர வட்டத்திற்குள் இழுத்துவரப்பட்ட மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களும் தமிழர் தரப்பின் நடவடிக்கைகளாலேயே முற்றுப்பெற்றது. இதில் கவனிக்க வேண்டிய இன்னெரு விடயமும் உண்டு. மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களின் போதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனே தீர்மானிப்பவராக இருந்திருக்கிறார். இந்த இடத்தில் மலையக மக்களின் தலைவரான சௌமிய மூர்த்தி தொண்டமான் கூறிய ஒரு அபிப்பிராயமே நினைவுக்கு வருகிறது. அவர் அன்றிருந்த மிதவாத தலைமைகளை கருத்தில் கொண்டுதான் இதனை கூறியிருக்கிறார்.

இரா. சம்பந்தன் தமிழர் அரசியலுக்குள் தலைவராக காலடியெடுத்து வைக்கின்றார். நான், “தலைவராக காலடியெடுத்து” என்று குறிப்பிடுவதற்கு ஒரு தெளிவான காரணம் உண்டு. 1990களுக்கு பின்னர் மிதவாதத் தலைவர்கள் எவரும் தமிழர் அரசியலில் தலைவர்களாக பிரவேசிக்கக் கூடிய நிலைமை இருந்திருக்கவில்லை. 90களுக்குப் பின்னரான தமிழர் அரசியல் என்பதே புலிகளின் உச்சரிப்பாகவே இருந்தது. புலிகளின் அழிவிற்கு பின்னர்தான் சம்பந்தன் தலைவராக வருகின்றார். சம்பந்தன் தமிழரசு கட்சி, பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றில் முக்கியமான தலைவராக இருந்த போதிலும் கூட இறுதித் தீர்மானங்களை எடுக்கவல்ல தலைவராக ஒரு போதுமே இருந்திருக்கவில்லை. உண்மையில் 2009இற்கு பின்னர்தான் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இரா. சம்பந்தன் தீர்மானம் எடுக்கும் தலைவராக வெளிவருகின்றார். அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றதும் முதலாவதாக அதுவரை பிரபாகரனால் நிராகரிக்கப்பட்டு வந்த இந்தியாவின் தலையீட்டினால் கிடைக்கப்பெற்ற மாகாண சபை முறைமையில் பங்குபற்றும் முடிவை எடுக்கின்றார். இது சம்பந்தனின் மிகச் சிறந்த முடிவாகும். ஆனால், இராஜதந்திர அரசியலை கையாளுவதற்கான வாய்ப்பு அவருக்கு மிகவும் மட்டுப்பட்டதாகவே இருக்கிறது.

தமிழரின் அரசியல் சர்வதேச அளவில் தோற்றம் காட்டினாலும் கூட, உண்மையில் அது அதிகம் இலங்கைக்குள்தான் கட்டுண்டு கிடக்கிறது. கூட்டமைப்பின் அண்மைய புதுடில்லி விஜயத்தின் போதும் மோடி தலைமையிலான அரசு அத்தகையதொரு செய்தியையே நினைவூட்டியிருக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தினை அடித்தளமாகக் கொண்டு ஒரு தீர்வினை பெறுவதற்கான உதவியையே தங்களால் வழங்க முடியுமென்னும் பதிலே கூட்டமைப்பிற்கு கிடைத்திருக்கிறது. இத்தகையதொரு பின்னணியில் தமிழரின் இராஜதந்திர எல்லை எதுவாக இருக்க முடியும்? இன்றைய சூழலில் ஓரளவிற்கு இந்தியாவின் தலையீட்டினால் கிடைக்கப்பெற்ற மாகாண சபை முறைமை ஒன்றுதான் கூட்டமைப்பின் இராஜதந்திர நகர்விற்கு கைகொடுக்கக் கூடிய ஒன்றாக காணப்படுகிறது. ஏனெனில், மாகாணசபை ஒன்றைக் கொண்டுதான் இந்தியாவை தமிழர் விவகாரத்தினுள் இழுத்துவிட முடியும். இந்தியா தமிழர் விவகாரத்தினுள் தலையிட்டால் மட்டுமே அதற்கொரு இராஜதந்திர பெறுமானம் கிடைக்கும்.

SHARE