152 வருடங்களின் பின் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு புதிய கட்டிடம் – 60 வருடங்களின் பின் பாரத பிரதமரின் மலையக விஜயமும் 

260
டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடத்தை எதிர்வரும் 12 ம்திகதி பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி   திறந்து வைக்கவுள்ளார் இவரை வரவேற்க மலையக தலைமைகள் தாயார்படுத்தி வருகின்றனர்.
மலையக இந்திய வம்சாவளி மக்களின் தொப்புள் கொடி உறவுக ளின் இந்தியதேச மக்களின் பிரதமர் நரோந்திர மோடியின் மலையக விஜயம்  ஒரு வரலாறு நிகழ்வாகும்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கள் வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன. பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோரும்
 கலந்துகொள்ளவுள்ளனர்.
டிக்கோயா மாவட்டவைத்தியசாலையின் வரலாறு 
நுவரெலியா மாவட்டதில் நோர்வூட் நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர்தூரத்தில் 5 ஏக்கர் நிளப்பரப்பில் அமைந்துள்ள டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலை 1865 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெள்ளையர்களினால் நிர்மாணிக்கப்பட்டது 75 கட்டிகளுடைய மேற்படி வைத்தியசாலையின் நிர்மாணப்பனிகளுக்கான சகல பொருட்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது அமைக்கப்பட்ட டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை 152 வருடம் பழமைவாய்ந்த டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் படிப்படியாக கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டு 150. கட்டில்களை கொண்ட வைத்தியசாலையாக இயங்கியது.
வளப்பற்றாக்குறைகளுக்கு மத்தியில் இயங்கிவந்த டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர்களினால் கடந்தகாலங்களில்  பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளமை மறுதளிக்கமுடியாது.
 வைத்தியசாலையில் இடப்பற்றாக்குறையினாலும் வளப்பற்றாக்குறையினால் நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை.நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலை.மற்றும் கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டனர்.
இந் நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களை  எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 இவ்வாறான நிலையிலும் 2016 ம் ஆண்டு காலப்பகுதியில் பெண் ஒருவருக்கு வயிற்றிலிருந்த 15 கிலோ கிராம் சதைக்கட்டியை டிக்கோயா மாவட்ட விசேட வைத்திய நிபுணர்களினால் சத்திரசிகிச்சையூடாக அகற்றியமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே  ஒரே சூழில் பிறந்த மூன்று குழந்தைகளை சத்திரசிகிச்சையினூடாக பிரசவிக்கச்செய்தமை வைத்தியசாலை வரலாற்றில் முக்கிய அம்சங்களாகும்.
டிக்கோயா மவட்ட வைத்தியசலையின் புதிய கட்டிடம் 
மலையக அரசியல் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கினங்க இந்திய அரசாங்கத்தின் 120  கோடி ரூபா நிதியுதவியில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்   தற்போதைய நாட்டின் ஜனாதிபதியும் அக்கால சுகாதார அமைச்சருமாகிய மைத்திரிபால சிரிசேன அவர்களினால்  2011.ஜுன் மாதம் 4 ம்திகதி நாட்டப்பட்டது  நிகழ்வில் அன்றைய கால  இந்திய தூதுவரும் கலந்துகொண்டார்.
புதிய கட்டிடத்தில் கட்டமைப்பு வசதிகள் 
அதி நவீன முறையில் மூன்று மாடி கட்டிடத்தை கொண்ட நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடமா னது இந்திய அரசின் 120 கோடி ரூபா நிதியுதவியில்  150 கட்டில்களை கொண்டு அவசர  சத்திரசிகிச்சை பிரிவு.இரண்டு லிப்ட்.நவீன சமையலறை.ஒன்றுகூடலறை. வைத்தியர்களுக்கான ஓய்வறை.சிறுவர் பூங்கா. வைத்தியர் விடுதகள் என சகல வளங்களுடன்  நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
கட்டட நிர்மாணப்பனிகளுக்கான சகல வளங்களும் பொருட்களும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு இந்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்திய பணியாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடம்  2013 ம் ஆண்டு நிர்மானப்பணிகள் நிறைவடைந்தது.
 கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்காத நிலையில் மலையகத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் வைத்தியலையை உடனடியாக திறக்ககோரி ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது அத்துடன் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் பெருப்பேற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்  இது தொடர்பில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய பெருப்பதிகாரி வைத்தியர் திலின விஜேசிங்க கருத்து தெரிவிக்கையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசு பெருப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர் ஆனால் மாகாண அமைச்சினூடாக முன்னெடுக்க முடியும் என என்னுகிறேன்  ஏனெனில் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் மாத்தளை மாவட்ட வைத்தியசாலை.நாவலப்பிட்டி  மாவட்ட வைத்தியசாலை .ஹங்குராங்கெத்த. மாவட்ட வைத்தியசாலைகள் சிறப்பாக இயங்குகின்றன அவ்வாறான நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையையும் சிறப்பாக நடத்த முடியும் என  தெரிவித்தார்.
பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின்  விஜயம் 
தேசிய வெசாக் நிகழ்வை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தின் அழைப்பையேற்று வருகைத்தரும் இந்திய தேசத்தின் பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடி மலையகத்திற்கும் விஜயம் செய்து டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதுடன் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் மலையக மக்கள் மத்தியில் விசேட உரையும் நிகழ்த்தவுள்ளார்.
கடந்த காலத்தில் மலையகம் விஜயம் செய்த இந்திய பிரமுகர்கள்
காந்தியின்  இலங்கை  விஜயம் 
1927 ம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ம் திகதி இலங்கை வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த விஜயத்தை காந்தி மேற்கொண்டிருந்தார் ஆனால் இது அரசியல்  ரீதியான விஜயமல்ல 1927. ஆம் ஆண்டு நவம்பர் 12 திகதி இலங்கை விஜயம் செய்த காந்தி  மூன்று வாரங்கள் தங்கியிருந்து கொழும்நு.கண்டி. யாழ்பாணம். மாத்தளை.பதுளை.காலி.சிலாபம். உட்பட பல முக்கிய இடங்களுக்கு  விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நேருவின் இலங்கை விஜயம்
சுதந்திரத்திற்கு முன் 1931 ம் ஆண்டு தனிப்பட்ட விஜயத்தைமேற்கொண்டிருந்த அவர் நுவரெலியாவில் தங்கி  ஒய்வெடுக்க வருகைத்தந்திருந்தார்  அதன் பின்னர் 1939 ம் ஆண்டு தனிப்பட்ட விஜயமாக கண்டிக்கு வருகைத்தந்தார்.
1947 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் பிரதமரான பின்னர் 1957 ம் ஆண்டு மே மாதம் 17 ம் திகதி ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திராவுடன் இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்தார்  இது ஒரு அரசியல் மற்றும் ஆன்மீக விஜயமாக அமைந்தது.
அதன் பின்னராக இலங்கை  வருகைத்தந்த ராஜிவ் காந்தி மலையகத்திற்கு வருகைத்தரவில்லை இவ்வாறாக இந்திய பிரமுகர்களின் வருகை இருந்த போதிலும் அது மானிலத்தலைவர்களின் வருகையாகவே அமைந்தது.
வரலாற்றில் இரண்டாது தடவையாக. 60 வருடங்களின் பின் விஜயம் செய்யவுள்ள இந்திய தேசத்தின் பிரதமர் ஸ்ரீ நரேந்திரமோடியின் மலையக  விஜயம் வரலாற்று முக்கியத்துவம் பெருகிறது.
மோடியின் வருகையை முன்னிட்டு மலையக மக்கள் 
 வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கினர் மலையக மக்களின்  தொப்புள் கொடி ஊறவாக காணப்படும் பாரததேசத்தின் பிரதமரின் மலையக விஜயத்தில் மலையக.  மக்கள்  ஆவலாய் உள்ளனர்  இந்திய வம்சாவளி மலையக மக்களின் ஏதிர்பார்ப்பை பிரதிபளிக்கும் வகையில் அமையுமா பாரத பிரதமரின் விசேட உரை என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
(நோட்டன் பிரிட்ஜ் நிரூபர் மு.இராமச்சந்திரன்)
SHARE