16 ஆயிரம் மருந்துகளுக்கு மிகவும் பாதுகாப்பு நடைமுறை

391

நாட்டில் பயன்படுத்தப்படும் 16 ஆயிரம் மருந்துகளுக்கு மிகவும் பாதுகாப்பு நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரச வைத்தியசாலைகளில் அஸ்பிரின் மற்றும் லொசாட்டன் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமை தயாரிப்பு மற்றும் கேள்வி விதி முறைகளின் அடிப்படையில் செயற்பட்டதனாலேயே என சுகாதார அமைச்சின் மருந்து விநியோக பிரிவுப் பணிப்பாளர் டொக்டர் ஏ.டி.சுதர்ஷன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளையும் பரிசோதிப்பதற்கான இரசாயன கூடம் ஒன்றை அமைப்பதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

‘சுபாரதி’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரூமி முஹம்மட் கருத்து வெளியிடுகையில்,

சிறு பிள்ளைகளுக்கும் படை வீரர்களும் மருந்தைக் கொள்வனவு செய்யும் பொது அரசாங்கத்தின் ஒசுசல கிளைகளில் விசேட கழிவுகள் வழங்கப்படுகின்றது என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE