16 வயது பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை

290

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டொகம் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவி இன்று 23ஆம் திகதி பகல்11.30 மணிக்குத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட மாணவி தனது தாய் இன்று காலை திட்டியதைத் தொடர்ந்து கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டுக் கொண்டதாக அவரது தந்தை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சென்று பார்வை இட்டதுடன்  ஹட்டன் நீதிமன்ற நீதவான் பார்வையிடுவதற்கு வரவுள்ளதாகவும் மேலதிக விசாரணைக்காக ஹட்டன் கைரேகை பிரிவினர் வருகை தரவுள்ளனர் எனவும் மஸ்கெலியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

SHARE