160 கோடி ருபாய் கொடுத்து வாங்கிய வீடு.. திடீரென வெளியேறிய பிரியங்கா சோப்ரா

71

 

நடிகை பிரியங்கா சோப்ரா 2000 வருடத்தில் உலக அழகி பட்டம் வென்று, அதன் பின் 2002ல் விஜய்யின் தமிழன் படம் மூலமாக அறிமுகம் ஆனவர்.

படிப்படியாக ஹிந்தி சினிமாவில் உச்சத்திற்கு சென்ற அவர் தற்போது ஹாலிவுட் வரை பாப்புலர் ஆகி இருக்கிறார். அவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வாடகை தாய் மூலமாக ஒரு மகளும் இருக்கிறார்.

2019ல் அவர்கள் 20 மில்லியன் டாலர்கள் கொடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் இரு வீட்டை வாங்கி அதில் வசித்து வந்தனர். இந்திய மதிப்பில் அதன் மதிப்பு 160 கோடி ரூபாய்க்கும் அதிகம்.

அந்த வீட்டில் 7 பெட்ரூம், ஒன்பது பாத்ரூம், ஸ்பா, ஜிம், செஃப் கிட்சன், ஸ்டீம் ஷவர், தியேட்டர், விளையாட்டு அறை என மிக பிரம்மாண்டமான வசதிகள் இருக்கின்றன.

வீட்டை விட்டு வெளியேறிய பிரியங்கா
அவ்வளவு பணம் கொடுத்து வாங்கி இருந்தாலும் தற்போது வீட்டில் நீர் கசிவு ஏற்பட்டு, பூஞ்சைகளால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் உடல்நல பிரச்சனை வரக்கூடும் என அந்த வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.

தற்போது வீட்டை விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்து இருக்கும் பிரியங்கா சோப்ரா – ஜோனஸ் தம்பதி இழப்பீடு கேட்டிருக்கின்றனர். வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

SHARE