இத்தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஜூன் 19-ந் திகதி மெகந்தி நிகழ்ச்சியும், 20-ந் திகதி ரக்சாதி ஹரிபுரிலும், 22-ந் திகதி வலிமா நிகழ்ச்சி ராவல்பிண்டியிலும் நடைபெறும் என செய்தி தெரிவித்துள்ளது. கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஹரிபுரைச் சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தாக் கானை அக்தர் குடும்பம் கடந்த வருடம் ஹஜ்ஜில் சந்தித்தது. அப்போது முஸ்தாக் கான் மனைவியிடம் தங்களது 39-வயது மகனான சோயிப் அக்தருக்கு பொருத்தமான பெண் இருந்தால் சொல்லவும் என்று கேட்டுக்கொண்டனர்.
பாகிஸ்தானுக்கு திரும்பிய பின்னரும் அவர்களது தொடர்பு தொடர்ந்தது. இறுதியில் அவர்கள் ருபாப் என்ற பெண்ணை அக்தருக்கு பேசி முடித்துள்ளனர். ருபாப்-க்கு 17 வயதுதான் ஆகிறது. அவருடன் உடன்பிறந்தவர்கள் 3 சசோதரர்களும், ஒரு தங்கையும் உள்ளனர். திருமணத்திற்காக தனது சொந்த ஊரான ராவல்பிண்டிக்கு 12-ம் திகதி செல்கிறார்.