18ந் தேதி நடக்கிறது கவியரசர் கண்ணதாசன் விழா….

387

கவியரசர் கண்ணதாசன்-விஸ்வநாதன் அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் கவியரசர் கண்ணதாசன் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 18ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குமாரராஜா முத்தையா அரங்கில் மாலை 6 மணிக்கு நடக்கும் விழாவில் டாக்டர் குமாரராணி மீனா முத்தையா குத்துவிளக்கேற்றுகிறார். ப.லட்சுமணன் தலைமை தாங்கி கவியரசர் விருதுகளை வழங்குகிறார். பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் “கவியரசு கண்ணதாசன் பாடல்களும் நான் பாடிய பாமாலைகளும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநான், செயலாளரும் பட அதிபருமான ஏவிஎம் சரவணன், பொருளாளரும், இயக்குனருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகியோர் செய்து வருகிறார்கள்.

 

 

SHARE