இணைய ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் இன்று தனது 18வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் கூகுள் நிறுவனம் நிறுவப்பட்டது.
தற்போது இந்த கூகுள் உலகின் மிகப் பெரிய தொழிநுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கிறது.
இந்த மாதத்தில் கூகுள் தனது பிறந்தநாளை குறைந்தபட்சம் 5 நாட்கள் (செப்டெம்பர் 4, 7, 8, 26, மற்றும் 27) கொண்டாடிய நிலையில், செப்டெம்பர் 27ம் திகதி, 2006ஆம் ஆண்டு முதல் அன்று மட்டும் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் இன்று பிறந்த நாளை கொண்டாடும் வகையில், தனது முகப்புப் பக்கத்தில் வண்ண மையமான பலூன்களுடன் சிறப்பு டூடுலை கூகுள் வடிவமைத்துள்ளது.