காத்தான் குடி முஸ்லீம் படுகொலை தொடர்பில் விடுதலை புலிகளின் முன்னால் தளபதி கேணல் கருணா விசாரனைக்கு உற்படுத்தப்பட வேண்டும் 26 வருடங்கள் முடிவு

1990 -1991 ஆம் ஆண்டுகள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளாகும். 1990 இல் தான் கிழக்குமாகாண மண்ணில் இரத்தவெள்ளம் பாய்ந்தோடியது. கிழக்கே பள்ளிவாசல்களிலும், முஸ்லிம் கிராமங்களிலும் பிணங்கள் மலைபோல குவிந்து கிடந்தது. இந்த கொடிய நினைவுகளின் மையமான ஆகஸ்ட் மூன்றாவது நாளை இலங்கை முஸ்லிம்கள் ஸுஹதாக்கள் தினமாக பிரகடனப்படுத்தி நினைவுகூர்ந்து வருகிறார்கள்.
12-07-1990 மக்கா புனித யாத்திரை சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 68 முஸ்லிம்களை குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ பாசிசப் புலி பயங்கரவாதிகள் வெட்டியும் சுட்டும் கொன்றனர்.
03-08-1990 காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும் ஹுசைனியா தைக்காவிலும் தொழுகையிலீடுபட்டு கொண்டிருந்த முஸ்லிம்கள் 103 பேர் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகளால் சராமாரியாக சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். ஏறாவூரை அண்டிய ஜயன்கேணி, சதான் உசைன் கிராமம் போன்றவற்றில் உறக்கத்திலிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கற்பிணிகள் எல்லோருமாக 116 பேர் தமிழீழ விடுதலைப் பாசிசப் புலிகளினால் வெட்டியும் கொத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
1992 ஏப்ரல் 29ம் நாள் அழிஞ்சிப் பொத்தானை கிராமத்தில் 69 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். 1992 ஜூலை 15ம் நாள் கிரான்குளத்தில் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து இறக்கப்பட்ட 22 முஸ்லிம்கள் புலிகளால் கொல்லப் பட்டனர்

1990களில் கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்ய புலிகள், முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலைகளும் அழிவுகளும் வரலாற்றுப் பதிவுகளுக்குரிய பேரவலமாகும்.
பொத்துவில் தொடக்கம், அக்கரைப்பற்று, ஒலுவில், சாய்ந்தமருது, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, மூதூர் என புலிகள் முஸ்லிம்கள் மீது மிகப்பெரியளவிலான பாசிச பயங்கரவாதத்தை ஏவி அவர்களை வெளியேற்ற முயன்றனர்.
கிழக்கின் பல முஸ்லிம் கிராமங்கள் 4 வருடங்களுக்கு மேலாக, புலிகளின் பாசிச பயங்கரவாத முற்றுகைக்குள்ளேயே இருந்தன.
இக்கால பகுதில் பல பாசிச கொலை வெறியாட்டங்கள் அரங்கேறின ஆனால் இன்று பல கொலை வெறியாட்டம் போட்ட பாசிச பயங்கரவாத கும்பல் வேருடன் பிடுங்கி எறியப்பட்டது பயங்கரவாதிகள் அழித்து ஒழிக்கபட்டனர், பயங்கரவாத கொட்டம் அடங்கியது நாட்டில் அமைதியை விரும்பிய அனைவரும் மகிழ்ந்தனர்.
தமிழ் புலி பயங்கரவாதிகளை ஆதரித்தவர்கள் மாற்று சமூகத்துடன் நற்பண்புடன் இனியாவது பழக கற்றுகொள்ளவேண்டும் குறிப்பாக தமிழ்பேசும் முஸ்லிம்களுடன்.
கிழக்கு முஸ்லிம்களை இனசுத்திகரிப்பு செய்த புலிகளின் வீர..??? வரலாறு
2006
ஆகஸ்ட் -01-மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990
ஆகஸ்ட்- 01 அக்கரைபற்று 8 முஸ்லிம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 03காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லி ம்கள் படுகொலை
ஆகஸ்ட்- 05 அம்பாறை முல்லியன்காடு, 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 06 அம்பாற 33முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட் -12 சமாந்துரை 4 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
ஆகஸ்ட்- 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
ஆகஸ்ட்- 13 வவுனியா 9 முஸ்லிம்கள் படுகொலை
முஸ்லிம் இளம் கற்பிணி தாயை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெழியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் இது ரஞ்சித் அப்பாவின் தலைமையில் காத்தான்குடியில் நடந்தது
சிறுவர் சிறுமியரின் பெண்கள் வயோதிபர்கள் என்ற பாகுபாடு இன்றி கொத்தி கொதறி பிச்சு எறியப்பட்டனர் இந்த பயங்கரவாதபுலிகள் ஒரு மாதமே ஆன சிசுவை கூட விடவில்லை தலையில் அடித்து தலை சிதறடிக்கப்பட்ட பின் வீசி எறிந்தார்கள் புலி பயங்கரவாதிகள்
104 முஸ்லிம்கள் 03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இஸாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.